ல . சண்முகசுந்தரம்
“லானா சானா” என்றும் “ல.ச” என்றும் “LS” என்றும் இலக்கிய சமூகமும், மாணவ சமூகமும் அன்போடு அழைத்த அழைப்புக்கு சொந்தக்காரர் வித்வான். ல.சண்முகசுந்தரம்…
முதல் சந்திப்பும்
ரசிகமணி டி.கே.சியின் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ல.சவின் மனம் ‘டிகேசி’யை நேரில் காண அவரை குற்றாலத்திற்கு இழுத்துச்சென்றது, முதல் சந்திப்பே இனி காலமெல்லாம் டிகேசியின் நிழலாய் தொடர வேண்டுமென்ற உறுதிப்பாடு கொள்ளச் செய்துவிட்டது, டிகேசியுடன் கண்ணுக்கு கண் கண்டு மகிழ்ந்து உரையாடி வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் தான், எஞ்சிய 60 ஆண்டுகளும் லச தனது மனதில் ரசிகமணியோடு உறவாடி வாழ்ந்தார், ரசிமணியோடு உறவாடிய தருணங்களை விட பெற்ற விருதுகளும் கிடைத்த புகழும் பெரிதாகத் தன்னை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை என்பார் ல.ச
“ல.ச”வின் விருதுகள்
“ல.ச”வின் படைப்புகள்
ல.சண்முகசுந்தரம்
“கல்வி என்றால் யோசிக்க வைக்க வேண்டும், அறியாமை அகல வேண்டும், மூடத்தனம் ஒழிய வேண்டும், குருட்டுத்தனத்தை வளர்க்கின்ற காரியமாக இருத்தல் கூடாது”
“தங்கள் புலமையையும் ஆர்வத்தையும் வியந்து கொண்டே இருக்கின்றேன் இருட்டுக்குள் கிடக்கும் மணிகளைத் தேடித்தேடி ரொம்பவும் கஷ்டப்படுகிறீர்களே… அவ்வளவுக்கும் எங்கே இருந்து தான் பொறுமை வந்ததோ… எப்படியோ அநேக மணிகளைத் தேடி எடுத்து விட்டீர்கள் ரொம்ப சந்தோசம்…”
- டி.கே.சி கடிதத்தில் இருந்து,
24.06.1946