வித்வான் ல . சண்முகசுந்தரம்

“ல.ச”வின் வரலாறு

“லானா சானா” என்றும் “ல.ச” என்றும் “L.S” என்றும் இலக்கிய சமூகமும், மாணவ சமூகமும் அன்போடு அழைத்த அழைப்புக்கு சொந்தக்காரர் வித்வான். ல.சண்முகசுந்தரம்… நெல்லை மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் நாச்சியார்புரம் என்ற சிற்றூரில் லட்சுமணன் – அருணாச்சல வடிவுக்கு மகனாக 03-06-1923ல் பிறந்தவர்.

பள்ளிக் கல்வியை முடித்த பின் மதுரை தமிழ்ச்சங்க கல்லூரியில் புலவர் படிப்பையும் திருவையாறில் வித்வான் படிப்பையும் முடித்து விருதுநகர் தட்சிணமாற பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் துவக்கிய லானாசானா கழுகுமலை, தென்காசி பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இது ஒருபுறம் இருக்க, ரசிகமணியின் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட லசவின் மனம் ‘டிகேசி’யைக் காண அவரை குற்றாலத்திற்கு இழுத்துச்சென்றது, முதல் சந்திப்பே இனி காலமெல்லாம் டிகேசியின் நிழலாய் தொடர வேண்டுமென்ற உறுதிப்பாடு கொள்ளச் செய்துவிட்டது, டிகேசியுடன் கண்ணுக்கு கண் கண்டு மகிழ்ந்து உரையாடி வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் தான், எஞ்சிய 60 ஆண்டுகளும் லச தனது மனதில் ரசிகமணியோடு உறவாடி வாழ்ந்தார், ரசிமணியோடு உறவாடிய தருணங்களை விட பெற்ற விருதுகளும் கிடைத்த புகழும் பெரிதாகத் தன்னை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை என்பார் லச.

“கல்வி என்றால் யோசிக்க வைக்க வேண்டும், அறியாமை அகல வேண்டும், மூடத்தனம் ஒழிய வேண்டும், குருட்டுத்தனத்தை வளர்க்கின்ற காரியமாக இருத்தல் கூடாது”           

“அன்பு, பொறுமை, பண்பு, வீரம், கவி போன்றன அரியதாகவும் இருக்கின்றன, எளியதாகவும் இருக்கின்றன, அதைவிட அழகுமயமாக இருக்கின்றன ஆக, அருமைக்கு அருமை, எளிமைக்கு எளிமை இவைதான் அழகின் சன்னிதானம்”

- ல. சண்முக சுந்தரம்

பேசும் கடிதங்கள்

“தங்கள் புலமையையும் ஆர்வத்தையும் வியந்து கொண்டே இருக்கின்றேன் இருட்டுக்குள் கிடக்கும் மணிகளைத் தேடித்தேடி ரொம்பவும் கஷ்டப்படுகிறீர்களே… அவ்வளவுக்கும் எங்கே இருந்து தான் பொறுமை வந்ததோ… எப்படியோ அநேக மணிகளைத் தேடி எடுத்து விட்டீர்கள் ரொம்ப சந்தோசம்…”

- டி.கே.சி 24.06.1946.

“நீங்கள் எழுதி வரும் திருமந்திரக் கட்டுரைகளை ஒழுங்காக படித்து அனுபவித்து வருகிறேன். நல்ல தெளிந்த நடையில் கலைப்பண்பு தெரிந்து விமர்சனம் செய்து வருகிறீர்கள். சில அபிப்ராயங்களை ரசிகமணிக்கு கூட இல்லாத துணிச்சலோடு சொல்லி இருக்கிறீர்கள்”.

- நீதிபதி மகராசன், 31-01-1955

“சண்முகசுந்தரத்தை தினமும் ரசிகமணியின் பாணியில் நாலு கம்ப இராமாயணப்  பாடலை பத்து பேர் முன்னிலையில் பாட வைத்து விளக்கம் சொன்னாலே போதும்.அதுவே ரசிகமணிக்கு நாம் கட்டும் மணிமண்டபம்”.

- மூதறிஞர் ராஜாஜி, 31-01-1955.

“ல.ச”வின் பயணங்கள்

“ல.ச”வின் குடும்பம்

மதுரத்வனி வழங்கும்
அறிஞர் ல .சண்முகசுந்தரம் நூற்றாண்டு விழா

Play Video